இந்தியா

இந்து-முஸ்லிம் ஒற்றுமையை விளக்கும் விளம்பரத்தை தனிஷ்க் நீக்குவதா? – சசிதரூர் கண்டனம்

இந்து-முஸ்லிம் ஒற்றுமையை விளக்கும் விளம்பரத்தை தனிஷ்க் நீக்குவதா? – சசிதரூர் கண்டனம்

sharpana

எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தன்னுடைய விளம்பரத்தை தனிஷ்க் நிறுவனம் நீக்கியதற்கு சசிதரூர் எம்.பி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

 சாதி, மத அடிப்படையிலான பல்வேறு விளம்பரங்கள் எடுக்கப்பட்டு வைரலாகி வருகின்றன. சமீபத்தில் சாதியொழிப்பை பேசி த்ரீ ரோசஸ் விளம்பரம் பாராட்டுக்களைக் குவித்தது. அதேபோல, கடந்தவாரம் தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனத்தின் விளம்பரம் சர்ச்சையாகி இருக்கிறது.

அந்த விளம்பரத்தில் இந்துமத கர்ப்பிணி பெண்ணுக்கு அவரது இஸ்லாமிய மாமியார் வளைகாப்பு நடத்துவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து, ‘இது லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதுபோல் இருக்கிறது’ என்று பலர் கண்டனம் தெரிவித்தார்கள். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் ‘boycott tanishq’ என்ற ஹேஷ்டாக்கும் ட்ரெண்டிங்கும் ஆனது.

எதிர்ப்புகள் கிளம்பியதால், தனிஷ்க் நிறுவனம் தற்போது அந்த விளம்பர வீடியோவை  யூடியூப் பக்கத்தில் நீக்கியுள்ளது. விளம்பரத்தை தனிஷ்க் நிறுவனம் நீக்கியதற்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இந்த அழகான விளம்பரம் இந்து முஸ்லிம் ஒற்றுமையை முன்னிலைப்படுத்துகிறது. ஆனால், இந்துத்துவவாதிகள் தனிஷ்க்கை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களை இந்த விளம்பரம் எரிச்சலூட்டினால் ‘உலகில் இந்து முஸ்லீம் ஒற்றுமையின் மிக நீண்ட காலமாக எஞ்சியிருக்கும் இந்தியா என்ற அடையாளத்தை ஏன் அவர்கள் புறக்கணிக்கக்கூடாது?” என்று அந்த ட்விட்டரில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.