மக்களவையில் எம்.பி`கனிமொழி கருணாநிதி புதிய தலைமுறை
இந்தியா

தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு சட்டத்திருத்த மசோதா... மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

ஜெனிட்டா ரோஸ்லின்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே வக்ஃபு வாரியம் குறித்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். வக்ஃபு வாரியத்தின் சொத்து குறித்து தீர்மானிக்கும், வாரியத்தின் அதிகாரம் தொடர்பான இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுள்ளது.

ஆனால், இதற்கு பல முஸ்லீம் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் என எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும், இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தவகையில் எம்.பி வேணுகோபால், எம்.பி கனிமொழி, எம்.பி திருமாவளவன் உள்ளிட்டோர் தங்களின் கடும் எதிர்ப்புகளை இன்று அவையில் பதிவு செய்துள்ளனர். அந்தவகையில்,

எம்.பி கே.சி.வேணுகோபால்

வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், “மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கும் பிரிவினைவாத அரசியலை மக்கள் ஏற்கமாட்டார்கள். மத்திய பாஜக அரசு இஸ்லாமியர்களை குறிவைக்கிறது. இதில் முதலில் நீங்கள் முஸ்லீம்களை குறி வைத்துள்ளீர்கள், அடுத்தடுத்தது கிறிஸ்துவர்கள், அடுத்து ஜெயின் என செல்வீர்கள். வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல். மற்ற மதத்தினரின் நம்பிக்கைகளையும் அரசு மதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

எம்.பி. கனிமொழி

எம்.பி. கனிமொழி இதுகுறித்து தெரிவிக்கையில், “மத சிறுபான்மை, அரசமைப்பு, சமூக நீதி உள்ளிட்டவற்றிற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. அரசமைப்பு சட்டத்தில் உள்ள பிரிவுகள் 25, 26ஆகியவற்றை மீறுவதாக இந்த சட்டத்திருத்தம் உள்ளது. இந்து கோயில் தொடர்பானவற்றில் பிற மதத்தைச் சேர்ந்தோரை அனுமதிப்பீர்களா? குறிப்பிட்ட மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை உறுப்பினர்களாக இணைப்பது எப்படி சரியாகும்?” என்றார்.

எம்.பி திருமாவளவன்

எம்.பி திருமாவளவன் குறிப்பிட்ட கருத்துக்களை, கீழ் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் அறியலாம்: