இந்தியா

விரைவுச் செய்திகள்: தளர்வுகளுடன் ஊரடங்கு - பரிந்துரை | ஆங்சான் சூச்சி மீது புகார்

விரைவுச் செய்திகள்: தளர்வுகளுடன் ஊரடங்கு - பரிந்துரை | ஆங்சான் சூச்சி மீது புகார்

Sinekadhara

ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உயரதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நெல்மூட்டைகள் மழையில் நனைவதை தடுக்க உத்தரவு: கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உணவு வழங்கியதில் முறைகேடு? - விசாரணை: முன்களப் பணியாளர்களுக்கு உணவு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

சமூக வலைதளங்களுக்கான விதிகளுக்கு எதிர்ப்பு: சமூக வலைதளங்களுக்கான மத்திய அரசின் புதிய விதிமுறைகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் இசைக் கலைஞர் டி.எம் கிருஷ்ணா வழக்கு தொடர்ந்துள்ளார். அரசியலமைப்பு வழங்கிய கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதாக அவர் குற்றச்சாட்டியுள்ளார்..

நகை, பணம் திருட்டு - 3 காவலர்கள் கைது: வேலூர் அருகே சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் நகைகள் மற்றும் பணத்தை திருடியதாக 3 போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுகவை என் உயிரில் இருந்து பிரிக்கமுடியாது: அதிமுகவை தன் உயிரில் இருந்து பிரிக்கமுடியாது என சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. கட்சி என பொதுவாக குறிப்பிட்டு இதுவரை பேசி வந்த நிலையில் முதல்முறையாக நேரடியாக பெயரை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

அரசு உதவிப்பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு?: மருத்துவக்கல்லூரிகளில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

5 லட்சம் இந்தியர்களை ஏமாற்றிய சீன நிறுவனங்கள்: இந்தியாவில் இரண்டே மாதங்களில் 5 லட்சம் பேரிடம் சீன இணையதள நிறுவனங்கள் 150 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. டெல்லியில் திபெத்திய பெண் உட்பட 11 பேரை கைதுசெய்து இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

குத்துச்சண்டை வீரர் டிங்கோ காலமானார்: ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வரி ஏய்ப்பு செய்த பணக்காரர்கள்?: அமெரிக்காவின் முன்னணி பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் உள்ளிட்ட 25 பேரின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்சான் சூச்சி மீது புதிய புகார்: மியான்மரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ஆங்சான் சூச்சி மீது ஊழல் தடுப்பு அமைப்பு புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பயன்படுத்தி ஆதாயம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.