இந்தியா

தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்றார் தமிழிசை

தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்றார் தமிழிசை

webteam

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழிசை ஆளுநராக பொறுப்பேற்று கொண்டார்.  அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ராகவேந்திரா எஸ்.சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பின், தனது தந்தை குமரி அனந்தன் மற்றும் தாய் காலில் விழுந்து தமிழிசை ஆசி பெற்றார். 

பதவியேற்பு விழாவில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சுதீஷ் , ஏ.சி.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.