மத்திய அமைச்சரவை முகநூல்
இந்தியா

நேரு முதல் மோடி ஆட்சி வரை; தமிழத்தில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் எண்ணிக்கை?

ஒவ்வொரு பிரதமரின் அமைச்சரவையிலும் தமிழகத்திலிருந்து எத்தனை பேர் அமைச்சர்களாகியுள்ளனர் என்பதை தற்போது பார்ப்போம்.

PT WEB

ஒவ்வொரு பிரதமரின் அமைச்சரவையிலும் தமிழகத்திலிருந்து எத்தனை பேர் அமைச்சர்களாகியுள்ளனர் என்பதை தற்போது பார்ப்போம்.

பெரும்பாலான மத்திய அமைச்சரவைகளில் தமிழகத்தின் பங்களிப்பு குறைவாகவே இருந்து வந்துள்ளது. முதல் பிரதமர் நேரு தலைமையிலான அமைச்சரவையிலிருந்து 1991இல் அமைந்த நரசிம்மராவ் அரசு வரை தமிழகத்திலிருந்து 5 அல்லது அதற்கு கீழான எண்ணிக்கையிலேயே மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்திருந்தது.

1996க்கு பிறகு இந்நிலைமை வேகமாக மாறியது. இக்காலகட்டத்தில் எந்த ஒரு கட்சிக்கும் மத்தியில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காத நிலையில் மாநில கட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கத்தொடங்கியது. 1996இல் தேவ கவுடா அமைச்சரவையில் தமிழகத்திலிருந்து 8 அமைச்சர்கள் இடம் பெற்றனர். 1997இல் குஜ்ரால் அமைச்சரவையில் இது 9 ஆகவும் பின்னர் அமைந்த வாஜ்பாய் அமைச்சரவையில் இது 7ஆகவும் இருந்தது.

1999இல் 3ஆவது முறையாக வாஜ்பாய் ஆட்சியமைத்தபோது தமிழகத்திலிருந்து 12 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது. 2004இல் மன்மோகன் சிங் அரசில் இது 13 ஆக அதிகரித்த நிலையில் 2009இல் மன்மோகன்சிங்கின் 2ஆவது ஆட்சிக்காலத்தில் தமிழக அமைச்சர்கள் எண்ணிக்கை 11 ஆக குறைந்தது. எனினும் 2014இல் தனிப்பெரும்பான்மையுடன் கூடிய மோடி அரசில் தமிழகத்திலிருந்து தேர்வான பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் இணையமைச்சரானார். நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் இங்கிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வாகவில்லை.

2019இல் தமிழகத்திலிருந்து எல்.முருகன் மட்டும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றார். இம்முறையும் நிர்மலா சீதாராமன் அமைச்சரானாலும் அவர் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவை வழியாக அப்பதவியை பெற்றார்.

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஜெய்சங்கரும் அமைச்சரவையில் இடம் பெற்றார். இந்த சூழலில் இம்முறை தமிழகத்திலிருந்து எத்தனை பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது