மேமாதம் புதிய தலைமுறை
இந்தியா

தாமதமாகும் பருவமழை... செப்டம்பரிலும் கொளுத்தும் வெயில்! ஏன் இப்படி? விளக்கும் வானிலை ஆய்வாளர்!

PT WEB

கோடை காலம் முடிந்து பெருமூச்சு விட்ட மக்களுக்கு இன்னும் அனல் காற்று குறைந்தபாடில்லை... வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் FAN, ஏசியை நோக்கி ஓடும் நிலையே நீடிக்கிறது. இது எப்படா குறையும் என மக்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற தனியார் வானிலை ஆய்வாளர் பேசுகையில், "சூரியக் கதிர்கள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகர்வதால் கோடையில் வெப்பம் அதிகரிக்கும்.. அதே போல் கதிர்கள் வடக்கில் இருந்து தெற்கில் நகர்வதால் செப்டம்பரில் வெப்பம் அதிகரிக்கிறது. வடகிழக்கு மழை தொடங்கினால் வெப்பத்தின் தாக்கம் குறையும். தென்மேற்கு பருவமழை விடைபெற்றால் வடகிழக்கு மழை தொடங்கும். செப்டம்பர் 15ஆம் தேதிக்கு மேல் வடகிழக்கு மழை தொடங்கலாம்" என்கிறார்.

சென்னையை பொறுத்தவரை புதன்கிழமை (நாளை) வரை 3 - 4 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் அடுத்த வாரம் தொடக்கத்தில் மழைக்கான சாத்தியம் உள்ளதாகவும்... வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.