இந்தியா

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முதலிடம் - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முதலிடம் - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

webteam

நாட்டிலேயே அதிக மக்கள் மருத்த‌வக் காப்பீட்டை பெற்ற மாநிலம் என்ற சிறப்பை தமிழகம் பெற்றுள்ளது‌.

தமிழகத்தில் ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்கள் ஐந்து லட்சம் ரூபாய் காப்பீட்டுத் திட்டத்தை பெற்றுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது பதிலளித்த மத்திய சுகாராத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஏற்கெனவே தமிழகத்தின் அம்மா காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வரும் நிலையில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜான் ஆரோக்யா யோஜனாவுடன் இணைந்திருப்பதாக தெரிவித்தார். 

தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ‌மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா‌, மேற்கு வங்கம் குடும்பங்களும் பயனடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சிறுநீரக பாதிப்புகளுக்கான சிகிச்சைக்கு காப்பீட்டுத் திட்டம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாராத்துறை தெரிவித்துள்ளது. 

2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை 34 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஐந்தாயிரத்து 800 கோடி ரூபாய் செலவிடப்ப‌ட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவ‌த்துள்ளது‌‌‌. நாட்டில் உள்ள 11 மாநிலங்கள் தங்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு திட்டத்துடன் இணைத்துள்ளன.