நடிகை தமன்னா twitter
இந்தியா

IPL ஒளிபரப்பு விவகாரம் | மும்பை போலீஸ் அனுப்பிய சம்மனுக்கு அவகாசம் கோரிய நடிகை தமன்னா!

Fairplay செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அதிலிருந்து ஆஜராக அவகாசம் கோரியுள்ளார்.

Prakash J

கடந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் (viacom) பெற்றிருந்தது. அதேநேரத்தில், அந்த ஆண்டு மிகப் பிரபலமான செயலிகளில் ஒன்றாக விளங்கிய Fairplay செயலியில், IPL 2023 போட்டி சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டது. Fairplay செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி, Fairplay செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தது. இன்று, (ஏப்ரல் 29) நடிகை தமன்னா நேரில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நடிகை தமன்னா, தற்போது மும்பையில் இல்லாததால் மகாராஷ்டிரா சைபர் துறையிடம் ஆஜராக அவகாசம் கோரியுள்ளார்.

இதையும் படிக்க: வேட்பு மனு வாபஸ்.. பாஜகவில் ஐக்கியம்.. ஷாக் கொடுத்த காங். வேட்பாளர்.. இந்தூரிலும் பாஜக வெற்றி?