இந்தியா

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்- பாபா ராம்தேவ்

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்- பாபா ராம்தேவ்

Rasus

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளும் பெற்றோர்களின் வாக்குரிமையை பறிக்க ராம்தேவ் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு ராம்தேவ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிகரித்து வரும் மக்கள்தொகை குறித்து கவலை தெரிவித்தார். இரண்டு குழந்தைகளுக்கும் மேல் பெற்றுக் கொள்ளும் பெற்றோர்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

“இரண்டு குழந்தைகளுக்கும் மேல் பெற்றுக் கொள்ளும் பெற்றோர்களை அரசாங்க பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு அரசு வேலையும் கொடுக்கக்கூடாது. அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. இந்து முஸ்லிம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களிடத்திடலும் இந்த விதிமுறையை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மக்கள்தொகை அதுவாகவே குறைந்துவிடும்” எனத் தெரிவித்தார்.

ராம்தேவ் இவ்வாறு பேசுவது இது முதல்முறை அல்ல. ஏற்னெகவே கடந்த நவம்பர் மாதம் பேசிய ராம்தேவ், தன்னை போல திருமண வாழ்க்கைக்கு செல்லாதவர்களுக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அதேபோன்று திருமண வாழ்க்கைக்கு சென்று இரண்டு குழந்தைகளுக்கும் மேல் பெறுபவர்களின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.