இந்தியா

உ.பி.யின் சுற்றுலா கையேட்டில் தாஜ்மஹால் நீக்கம்

உ.பி.யின் சுற்றுலா கையேட்டில் தாஜ்மஹால் நீக்கம்

webteam

உத்தரப் பிரதேச மாநிலத்தின் சுற்றுலா கையேட்டில் தாஜ்மஹால் நீக்கப்பட்டு, கங்கை ஆர்த்தி படம் புத்தகத்தின் அட்டை பக்கத்தில் இடம் அளிக்கப்படுள்ள விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

உத்தரப் பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தும் கையேட்டை மாநில அரசு வெளியிட்டுள்ளது. கங்கையில் ஆரத்தி நடைபெறும் படம் அட்டையில் இடம்பெற்றுள்ள நிலையில், ஆக்ராவில் உள்ள 7 உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் கையேட்டில் இடம்பெறவில்லை. ஆண்டுதோறும் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிடும் நிலையில், அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டைச் சார்ந்தவர்கள். மேலும், உத்தரப் பிரதேச சுற்றுலாத்துறையில் பெரும் வருமானத்தை ஈட்டும் தாஜ்மஹால், சுற்றுலா கையேட்டில் இருந்து நீக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.