ஸ்வாதி மாலிவால், பிபவ் குமார் எக்ஸ்
இந்தியா

ஸ்வாதி மாலிவால் மீதான தாக்குதல் வழக்கு|கெஜ்ரிவால் உதவியாளருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மாலிவாலை தாக்கிய புகாரில் டெல்லி முதல்வரின் தனி உதவியாளரான பிபவ் குமாருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Prakash J

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்குத் தாம் சென்றிருந்ததாகவும், அப்போது இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்த தனி உதவியாளரான பிபவ் குமார் தன்னை தாக்கியதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மாலிவால் புகார் அளித்திருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது அவரின் உதவியாளர் பிபவ் குமார் 8 முறை கன்னத்தில் அறைந்ததாக ஸ்வாதி மாலிவால் எப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளார். மேலும், ”உன்னை கொன்று புதைத்துவிடுவேன்” என பிபவ் குமார் மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: Gpay, PhonePe-க்கு போட்டி.. அதானிக்கு முன்பாக களமிறங்கிய அம்பானி.. சலுகைகளுடன் Jio App தொடக்கம்!

இதையடுத்து, ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். இதனை தொடர்ந்து பிபவ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த மே 18ஆம் தேதி, பிபவ் குமார் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், பிபவ் குமார் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேநேரத்தில், பிபவ் குமாருக்கு வழங்கப்பட்ட போலீஸ் காவல் இன்றோடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து பிபவ் குமாருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: India Head Coach | தகுதிகள் என்னென்ன? தோனிக்கு ஏன் வாய்ப்பில்லை? கம்பீருக்கு இதனால்தான் வாய்ப்பு!