இந்தியா

நவராத்திரி விழாவிற்கு அரண்மையில் இருந்து புறப்பட்ட சிலைகள்

நவராத்திரி விழாவிற்கு அரண்மையில் இருந்து புறப்பட்ட சிலைகள்

webteam

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து வீரவாள், சுவாமி விக்கிரகங்களுடன் ஊர்வலம் புறப்பட்டது.

திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து வீரவாள்,‌விக்ரகங்கள் எடுத்து செல்லவது வழக்கம். அதன்படி பத்மநாபபுரம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வரும் மன்னரின் உடைவாள், தேவாரங்கோடு சரஸ்வதி தேவி, குமாரகோவில் முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் இன்று திருவனந்தபுரம் புறப்பட்டன. செண்டை மேளம் முழங்க, இருமாநில காவல்துறையினர் பாதுகாப்புடன் ஊர்வலம் தொடங்கியது. 

இதில், கேரளா அறநிலையத்துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன், தொல்லியல் துறை அமைச்சர் கடனபள்ளி ராமச்சந்திரன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாளை இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் சென்றடையும். சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலையை பாதுகாக்க வலியுறுத்தி இளைஞர்கள் சிலர் பதாகை ஏந்தினர். அமைச்சர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இளை‌‌ஞர்க‌ள் இவ்வாறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலையின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அந்த இளைஞர்கள் முழக்கமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.