இந்தியா

8 எம்.பி.க்கள் நடத்திய தர்ணா போராட்டம் வாபஸ்

8 எம்.பி.க்கள் நடத்திய தர்ணா போராட்டம் வாபஸ்

webteam

நாடாளுமன்ற வளாகத்தில் 8 எம்.பி.க்கள் நடத்திய தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பி.க்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து வெங்கையா நாயுடு உத்தரவிட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் நேற்று மாலை தொடங்கிய இப்போராட்டம் விடிய விடிய நடைபெற்றது. போராட்டம் நடத்திய எம்.பி.க்களுக்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தின் போது தேச பக்தி பாடல்களை பாடியதுடன் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

தங்கள் போராட்டம் காலவரையறையின்றி நடைபெறும் என திரிணமூல் எம்.பி.டெரக் ஓ பிரையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 8 எம்.பி.க்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கூட்டத் தொடரை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் பங்கேற்கும் விதமாக தர்ணா போராட்டத்தை 8 எம்.பி.க்களும் வாபஸ் பெற்றனர்