இந்தியா

“நிறைய வேண்டுதல்களுக்குப் பிறகுதான் சுஷாந்த் பிறந்தான்” - தந்தை உருக்கம்

“நிறைய வேண்டுதல்களுக்குப் பிறகுதான் சுஷாந்த் பிறந்தான்” - தந்தை உருக்கம்

PT

சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு சுயம்பு என அவரது தந்தையான கே.கே. சிங் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.தோனி வாழ்க்கை படத்தில் நடித்ததின் மூலமாகப் பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 15 ஆம் தேதி அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். . அவரது இறப்பு குறித்துக் காவல் துறையினர் விசாரணையைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் சுங்கின் தந்தையான கே.கே.சிங், தனது மகனுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறும் போது “சினிமா வாய்ப்புக்காக அவன் மும்பை புறப்படும் முன்னர், அதை என்னிடம் தெரிவிக்கவில்லை. எங்கே என்னிடம் சொன்னால் பட்டப்படிப்பை முடித்து விட்டுச் செல் என்று சொல்லிவிடுவேன் என்று பயந்து அவளது சகோதரியிடம் சொல்லிவிட்டுச் சென்றான். அவன் ஒரு சுயம்பு. அவன் அவனுக்கான அனைத்தையும் தகுதியின் அடிப்படையிலேயே பெற்றான்.

எனது மகள்கள் என்னிடம் சுஷாந்திற்கு நடிப்பின் மீது ஆர்வம் இருப்பதாகவும், அவனது கனவை அவன் அடைவதற்கு அனுமதிக்குமாறும் கூறினர். சுஷாந்த் நேர்மையானவன். ஆனால் கடுமையானவன் அல்ல. அவன் மீது நான் எந்த அழுத்தத்தையும் வைத்ததில்லை. அவன் திரைப்படங்களிலிருந்து விலகி ஒரு எளிய வாழ்கையை வாழவே ஆசைப்பட்டான்.

“பவித்ரா ரிஷ்தா” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தவுடன் அவன் வீட்டிற்கு வந்தான். அப்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவன் ஒரு சிறப்பான ஆன்மா. நிறைய வேண்டுதல்களுக்குப் பிறகுதான் அவன் பிறந்தான். அவன் குறுகிய காலகட்டத்திலேயே நிறையச் சாதனைகளைச் செய்துள்ளான்” என்று பேசினார்.