சுரேஷ் கோபி pt web
இந்தியா

இணை அமைச்சர் பதவியை உதறும் சுரேஷ் கோபி... படத்தில் நடிக்க இருப்பது காரணமா?

PT WEB

மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என நடிகர் சுரேஷ் கோபி பதவியேற்ற பின் கருத்து தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் இருந்து விரைவில் தன்னை விடுவிப்பார்கள் என நம்புகிறேன் என்றும் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். இணை அமைச்சராக நேற்று பதவியேற்ற நிலையில் மலையாள தொலைக்காட்சிக்கு சுரேஷ் கோபி இவ்வாறு பேட்டி அளித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சராக நடிகர் சுரேஷ் கோபி பதவியேற்பு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இணை அமைச்சராக நடிகர் சுரேஷ் கோபி பதவியேற்றார்

கேரளாவில் முதன்முறையாக திரிச்சூர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றிருந்தார். நேற்று நடந்த மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் சுரேஷ் கோபியும் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், பதவியேற்ற பின் மலையாள ஊடக செய்தியாளர்களைச் சந்தித்த சுரேஷ் கோபி, “எனக்கு பல திரைப்படங்கள் நடிக்க வேண்டி இருப்பதால் அமைச்சராக பொறுப்பேற்பது சிக்கல் ஏற்படுத்தும். பிரதமரிடம் இதுகுறித்து பேசினேன். பிரதமர் கூறியதன்படியே பதவி பிரமாணம் மேற்கொண்டேன். பிரதமர் என்னுடைய பிரச்னைகளை கருத்தில் கொண்டு என்னை பதவியில் இருந்து விடுவிப்பார் என எதிர்பார்க்கிறேன்” என்றும் தெரிவித்திருந்தார்.

கேரள மக்கள் சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சரவையில் பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த வேளையில்தான், மத்திய இணை அமைச்சராக சுரேஷ் கோபி பொறுப்பேற்றார். இந்நிலையில்தான், அவரது இந்த பேட்டி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.