இந்தியா

காற்று மாசை கட்டுப்படுத்த முடியாவிடில் எதற்காக அரசு..? : பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

காற்று மாசை கட்டுப்படுத்த முடியாவிடில் எதற்காக அரசு..? : பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

webteam

டெல்லி காற்று மாசு விவகாரத்தில் பஞ்சாப் தலைமை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் தலைநகரமான டெல்லி காற்று மாசு பிரச்னையால் சிக்கித் தவித்து வருகிறது. தீபாவளிக்குப் பிறகு அங்கு எடுக்கப்பட்ட ஏக்யூஐ (காற்று மாசு அளவீடு) அளவீட்டின்படி, காற்றின் மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதைத்தொடர்ந்து டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு இருமல், சுவாசப் பிரச்னைகள் போன்றவை ஏற்பட்டு வருகின்றன. காற்று மாசு டெல்லியில் பனிமூட்டம் போல படிந்திருப்பதால், போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 

இந்நிலையில் காற்று மாசு விவகாரத்தில் பஞ்சாப் அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த முடியாவிடில் எதற்கு அரசை நடத்துகிறீர்கள் ? என்று கேள்வி எழுப்பியுள்ளது. நிலைமையை சரிய செய்யமுடியாவிட்டால், பஞ்சாப் மாநிலத்தை மத்திய அரசே ஆளட்டுமே என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் பஞ்சாப் தலைமை செயலாளர் உரிய நடவடிக்கை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், கடைமையை செய்யத் தவறினால் பணி நீக்கம் செய்ய வேண்டி வரும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.