இந்தியா

காங்கிரஸ் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்

காங்கிரஸ் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்

webteam

கர்நாடகாவில் முதலமைச்சராக எடியூரப்பா நாளை காலை 9.30 மணிக்கு பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி அமைச்சர்கள் இல்லாமல், எடியூரப்பா மட்டும் நாளை பதவியேற்கிறார். மற்ற அமைச்சர்கள் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் பதவியேற்கவுள்ளார்கள். பதவியேற்ற நாளில் இருந்து அடுத்த 15 நாட்களில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிக் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த  முறையீட்டை இரவே அவசர வழக்காக விசாரிக்க பதிவாளரிடம் காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது. தலைமை நீதிபதியிடம் நேரம் கேட்குமாறு உச்சநீதிமன்ற பதிவாளரிடம், காங்கிரஸ் வழக்கறிஞர் அபினேஷ் வலியுறுத்தினார்.  ஏனெனில் முதல்வர் பதவியேற்ற பின்னர் வழக்கு தொடர்ந்தால், பல சட்டசிக்கல்கள் ஏற்படும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன், உச்சநீதிமன்ற பதிவாளர் ரவீந்தரா மைத்தானி அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் காங்கிரஸ் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மனு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு மத்தியில், இன்று நள்ளிரவு 1.45 மணிக்கு இந்த விசாரிக்கப்படவுள்ளது.