இந்தியா

அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு - தலைமை நீதிபதி

webteam

அயோத்தியில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்தது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசித்து வருகிறார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நஸீர் ஆகியோரை கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

அனைத்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கினர்.  தலைமை நீதிபதி தீர்ப்பை வாசித்து வருகிறார். அதன் விவரம் வருமாறு:

0) பாபர் மசூதி மிர்பாகியால் கட்டப்பட்டது

0) இறையியல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதல்ல

0) ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாது

0) மசூதியில் 1949-ம் ஆண்டில் சிலைகள் வைக்கப்பட்டன.

0) மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை ; அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது