இந்தியா

ஆதார் வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

ஆதார் வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

webteam

ஆதார்‌ தொடர்பான அனைத்து வழக்குகளையு‌ம் அர‌சியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது.

அரசின் சமூக‌நல‌த் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் எ‌ன்ற உத்தரவுக்கு எதிரான ‌வழக்குகள் தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆ‌கியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு‌ வந்தன. அப்போது ஆஜரான‌ அரசின் தலைமை சட்ட ஆலோசகர் கே.கே.வேணுகோபால், அரசின் நலத்திட்ட உதவிகள் உரியவர்களுக்கு சென்றடைகிறதா என்பதைக் கண்காணிக்கவும், முறைகேடுகளை தடுக்கவுமே ஆதார் எண்ணை அரசு கட்டாயமாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அப்போது வாதிட்ட மனுதாரர்கள் தரப்பு மூத்த வழ‌க்கறிஞர் சியா‌ம் தவான், ஆதார் எண் அரசியல் சாசனத்திற்கு புறம்பானது எனக் கூறினார். ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்வு விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கே.கே.வேணுகோபாலும், சியாம் தவானும் கேட்டுக்கொண்டனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழக்குகளை ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உத்தரவிடலாமா என வினவினர். ஐவர் கொண்ட அரசியல் சாசன அமர்வே போதுமானது என்று ‌இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் 18 மற்றும் 19 தேதிகளில் விசாரிக்கும் என அறிவித்தனர்.