சரத் பவார், உச்ச நீதிமன்றம், அஜித் பவார் எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா தேர்தல் | ‘சொந்தக்காலில் நில்லுங்கள்..’ அஜித் பவாருக்கு செக்வைத்த உச்ச நீதிமன்றம்!

சரத் பவாரின் புகைப்படங்கள், வீடியோக்களை பயன்படுத்தாமல், உங்களின் சொந்தக் காலில் நில்லுங்கள் என்று அஜித் பவார் அணிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது

Prakash J

மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் சிவசேனாவில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 288 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 20ஆம் தேதி ஒரேகட்டமாக மகாராஷ்டிரா தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அது தெரிவித்துள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடிக்கும், பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சமாஜ்வாடி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி ஆகியன அங்கம் வகித்துள்ளன. அதேநேரத்தில் மஹாயுதி கூட்டணியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே அணியின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பிடித்துள்ளன. இரண்டு கூட்டணிகளிலும் தொகுதிவாரியாக இடங்கள் பிரிக்கப்பட்டு களத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்| களத்தில் யார் யார்?.. அநுர குமராவுக்கு சிறப்பு மெஜாரிட்டி ஏன் அவசியம்?

இந்த நிலையில், சரத் பவாரின் புகைப்படங்கள், வீடியோக்களை பயன்படுத்தாமல், உங்களின் சொந்தக் காலில் நில்லுங்கள் என்று அஜித் பவார் அணிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. சரத் பவாா் தலைமையிலான கட்சியை அஜித் பவாா் உடைத்து மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியில் இணைந்தபோது, அவரது தலைமையில் அதிக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் இருந்தனா். இதனால், கட்சியின் பெயா், கடிகாரம் சின்னத்தைத் தோ்தல் ஆணையம் அஜித் பவாருக்கு ஒதுக்கியது. இதனை எதிா்த்து சரத் பவாா் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது. வழக்கு நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறுவதால் சின்னம் தொடா்பான பிரச்னை தீவிரமடைந்தது. இந்நிலையில், “ ‘கடிகாரம் சின்னம்’ நீதிமன்ற விசாரணையில் உள்ளது என நாளிதழ்களில் அஜித் பவாா் தரப்பு அடுத்த 36 மணி நேரத்தில் விளம்பரம் செய்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என உச்சநீதிமன்றம்உத்தரவிட்டது.

சரத் பவார், அஜித் பவார்

ஆனால், சரத் பவாரின் புகைப்படம், வீடியோ மற்றும் கடிகார சின்னத்தை தொடர்ந்து தேர்தல் பிரசாரத்துக்கு அஜித் பவார் அணி பயன்படுத்தி மக்களிடையே தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துவதாக சரத் பவார் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: "தமிழ் சமூகத்தின் அறிவியக்கத்திற்கு செழுமையூட்ட உழைத்தவர்” - எழுத்தாளர் ஆளுமை ராஜ் கெளதமன் மறைவு!

இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தேர்தல் களத்தில் சரத் பவாரின் பெயரை பயன்படுத்தி போட்டியிட வேண்டாம் என்று அஜித் பவார் அணிக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சரத் பவாருக்கும் உங்களுக்கும் வெவ்வேறு சித்தாந்தங்கள் இருப்பதால், நீங்கள் உங்களின் சொந்தக் காலில் நிற்க முயற்சிக்க வேண்டும் என்று அஜித் பவார் தரப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

முன்னதாக, அஜித் பவார் தனது மனைவி சுனேத்ரா பவாரை மக்களவைத் தேர்தலில் குடும்பக் கோட்டையான பாரமதி தொகுதியில் நிறுத்தினார். ஆனால் இவர், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவிடம் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுகூட, இரண்டு உறவினர்களுக்குள் கடுமையான போட்டி நிலவுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் அஜித் பவார் ஓர் இடத்திலும், சரத் பவாரின் கட்சி 8 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தது.

இதையும் படிக்க: