இந்தியா

“எழுத்தாளர்களின் சிந்தனையை கட்டுப்படுத்தக்கூடாது” - உச்சநீதிமன்றம்

“எழுத்தாளர்களின் சிந்தனையை கட்டுப்படுத்தக்கூடாது” - உச்சநீதிமன்றம்

webteam

எழுத்தாளர்களின் கற்பனை இப்படித்தான் இருக்கவேண்டும் எனக் கட்டமைக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து மதத்தினை இழிவு செய்யும் வகையிலும், இந்து மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையிலும் மீஷா என்ற புத்தகத்தில் அம்சங்கள் இருப்பதாக கேரளாவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியிருந்தார். இந்தப் புத்தகத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனக்கோரி அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
குறிப்பாக இந்து பெண்கள் கோயிலுக்குள் செல்வது பற்றிய கருத்துகள் இந்து மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் உள்ளது எனக் கூறியிருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, எழுத்தாளர்களின் சிந்தனை, கற்பனை சக்தியை ஒரு வரைமுறையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என யாராலும் கட்டமைக்க முடியாது என்றார். அதேபோல கூறவும் இயலாது எனக் குறிப்பிட்டார். எழுத்தாளர்களின் சிந்தனை, கற்பனை சுதந்திரமானது என்று தெரிவித்தார். அதனை கட்டாயப்படுத்தினால் அது புதிய சிந்தனைகள் உருவாவதை தடுப்பது போல் ஆகிவிடும் எனக் கூறினார். மேலும் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பாளித்தார்.