இந்தியா

”சரவெடிகள், போரியம் நைட்ரேட் பட்டாசுகள் தயாரிக்க, விற்க தடை” - உச்சநீதிமன்றம் உத்தரவு

நிவேதா ஜெகராஜா

தீபாவளி நெருங்கிவருவதை தொடர்ந்து, பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அதில் நீதிமன்றம் சார்பில் இடைக்கால ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேதிப்பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை உற்பத்தி செய்யவும் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஆணையில், “வெடிப்பொருள்களில் குறிப்பாக சரவெடிகளையும், போரியம் நைட்ரேட் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகளையும் தயாரிக்க - விற்க - வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மாநில கட்டாயம் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை, அனைத்து மாநில அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட வேதிப்பொருளில் தயாரிக்கப்பட்ட பட்டாசு பயன்படுத்தப்பட்டால் அதற்கு காவல்துறை, அரசு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.

பட்டாசு தொடர்பான இந்த உத்தரவை மாநில அரசுகள் ஊடகங்கள், டிஜிட்டல் தளங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். சரவெடி வெடிப்போர் மீது மட்டுமன்றி, போலி பசுமை பட்டாசுகளை விற்கும் உரிமையாளர்கள்மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கொண்டாட்டம் என்பது அடுத்தவரின் உடல்நலத்தை விலையாகக் கொடுக்கும் வகையில் இருக்கக்கூடாது” எனக்கூறப்பட்டது.