நீட் விவகாரம், உச்சநீதிமன்றம் pt web
இந்தியா

“நீட் மறுதேர்வு நடத்தப்படாது; முடிவுகளை ரத்து செய்யும் அளவிற்கும் முகாந்திரம் இல்லை” -உச்சநீதிமன்றம்

நீட் மறு தேர்வு நடத்தப்படாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யும் அளவுக்கு போதிய முகாந்திரம் இல்லை என்று தலைமை நீதிபதி அமர்வு விளக்கமளித்தது.

PT WEB

நீட் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு உள்ளிட்ட நீட் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு உத்தரவு பிறப்பித்தது.

நீட்

நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யும் அளவுக்கு போதிய முகாந்திரம் இல்லை, நீட் தேர்வு நடைமுறையில் விதிமீறல்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் கருத்துகளை தெரிவித்த நீதிபதிகள், நீட் தொடர்பான குளறுபடிகளை சரி செய்ய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இனி இதுபோன்ற சிக்கல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க செயல்முறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

நீட் தேர்வு தொடர்பான தற்போதைய பிரச்னைகள் ஒட்டுமொத்த தேர்வையும் முழுமையாக பாதிக்கவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்தனர். இதன் காரணமாக நீட் மறு தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், நீட் தேர்வு முடிவினை ரத்து செய்ய வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது. மேலும், நீட் விவகாரத்தில் கருணை மதிப்பெண் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், தங்களது உயர்நீதிமன்றங்களை நாடலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.