இந்தியா

ஒரு வாரத்திற்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

ஒரு வாரத்திற்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

webteam

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் தொடர்பான நடவடிக்கையில் குறுக்கீடு வராமல் இருக்க இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதை ஒரு வாரத்திற்காவது ஒத்தி வைக்க வேண்டும் என மத்திய அரசு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கும் விதத்தில் அவசர சட்டம் ஒன்றை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் அந்த முயற்சிக்கு குறுக்கீடு வராமல் இருக்க உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் ஒரு வாரத்திற்காகவது தீர்ப்பு வழங்குவதை ஒத்தி வைக்க வேண்டும் என மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். உச்சநீதிமன்றம் இடையில் ஏதேனும் தீர்ப்பு வழங்கினால் ஏற்கனவே கொதிநிலையில் உள்ள சூழ்நிலையை மேலும் மோசமாக்கி விடும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ள ரோத்தகி, எனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பை வழங்காமல் தற்போதைய நிலையை தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு, முகுல் ரோத்தகியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.