உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சஞ்சய் கரோல், முகநூல்
இந்தியா

”மாதவிடாய் காலத்தில் பெண்கள் 5 நாட்கள் வீட்டிற்குள் நுழைய தடை இருக்கிறது”- உச்சநீதிமன்ற நீதிபதி கவலை

இப்போதும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் 5 நாட்கள் வீட்டிற்குள் நுழைய தடை உள்ளது, நீதி கிடைக்காதவர்கள்! நீதி என்றால் என்னவென்று தெரியாதவர்களை நாம் அணுக வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

PT WEB

இப்போதும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் 5 நாட்கள் வீட்டிற்குள் நுழைய தடை உள்ளது, நீதி கிடைக்காதவர்கள்! நீதி என்றால் என்னவென்று தெரியாதவர்களை நாம் அணுக வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட பல்வேறு நீதிபதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் உரையாற்றிய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சஞ்சய் கரோல், ”பீகார் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் நடத்தப்படுவது வேதனையாக இருக்கிறது.

நீதிபதி சஞ்சய் கரோல் காண்பித்த புகைப்படம்

குறிப்பாக, 2023ம் ஆண்டு தொலைதூர கிராமம் ஒன்றுக்கு சென்று இருந்த போது அங்கு பெண் ஒருவர் மாதவிடாய் காரணமாக 5 நாட்கள் வீட்டுக்கு வெளியே அமர வைக்கப்பட்டிருந்தார். இதுபோன்ற இந்தியாவில் நாம் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தியா என்பது டெல்லியோ அல்லது மும்பையோ அல்ல, தொலைதூரத்தில் வசிக்கக்கூடிய ஒவ்வொருவரும் நாட்டின் பிரதிபலிப்பே. நாட்டின் கடைக்கோடியில் வசிக்கக்கூடிய நீதி கிடைக்காத ஒருவர் அல்லது நீதி என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரை சந்திக்க வேண்டும். அவர்களுடைய மொழியில் பேசி நாட்டின் சட்டத்தை புரிய வைக்க வேண்டும்.” என வழக்கறிஞர்கள் மற்றும் சக நீதிபதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

மாதவிடாய் காலத்தில் வீட்டிற்குள் பெண்களை அனுமதிக்காத சூழல் குறித்த புகைப்படத்தையும் மாநாட்டில் நீதிபதி வெளியிட்டார்.