வேதாந்தா - உச்சநீதிமன்றம் கோப்புப்படம்
இந்தியா

ஸ்டெர்லைட் ஆலை மீதான தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய வேதாந்தா மனு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

PT WEB

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கடந்த 2018ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதன் பிறகு மே மாதம் 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசின் முடிவு சரியானது என்று கூறி ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 29-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்த தீர்ப்ப மறு ஆய்வு செய்ய கோரி ஆலை நிர்வாகம் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.