உச்சநீதிமன்றம் முகநூல்
இந்தியா

”இளம்பெண்கள் பாலியல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்” என்ற நீதிமன்ற கருத்தை சாடிய உச்சநீதிமன்றம்!

PT WEB

இளம் பெண்கள் தங்கள் பாலியல் தூண்டுதல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்த கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

18 வயது பூர்த்தியடையாத இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கை, கடந்த ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றம் விசாரித்தது. இளைஞரை வழக்கில் இருந்து விடுவித்ததோடு, பாலியல் தூண்டல் உணர்ச்சியை இளம் பெண்கள் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதன் சர்ச்சைக்குரிய கருத்துகளை நிராகரித்ததோடு, இளைஞரை விடுதலை செய்த உத்தரவையும் ரத்து செய்தது. மேலும், வழக்கில் நீதிபதிகள் எவ்வாறு தீர்ப்புகளை எழுதவேண்டும் என்பது குறித்து விரிவான விளக்கங்களை தீர்ப்பில் வழங்கியுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.