இந்தியா

ஜல்லிக்கட்டு வழக்குகள்: 31-ஆம் தேதி விசாரணை

ஜல்லிக்கட்டு வழக்குகள்: 31-ஆம் தேதி விசாரணை

Rasus

ஜல்லிக்கட்டு தொடர்பான 2016-ம் ஆண்டின் அறிவிக்கையை திரும்பப் பெறும் மத்திய அரசின் மனுவை வரும் 31-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. மேலும் ஜல்லிக்கட்டிற்கு சட்டத்திற்கு எதிரான கூப்பாவின் மனுவும் அன்றைய தினம் விசாரிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து 2016-ஆம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி வெளியிட்டிருந்த அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை வரும் 31-ஆம் நடைபெற உள்ளது.

இதனிடையே ஜல்லிக்கட்டை அனுமதிக்க வழிவகை செய்யும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவை எதிர்க்கும் கூப்பாவின் மனுவும் அன்றையே தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.