இந்தியா

உ.பி: நொய்டா `ட்வின் டவர்’ கட்டடத்தை முழுமையாக இடிக்கும் பணி முடிவடையும் தேதி அறிவிப்பு!

உ.பி: நொய்டா `ட்வின் டவர்’ கட்டடத்தை முழுமையாக இடிக்கும் பணி முடிவடையும் தேதி அறிவிப்பு!

நிவேதா ஜெகராஜா

நொய்டாவில் உரிய அங்கீகாரமின்றி கட்டப்பட்ட இரட்டை அடுக்குமாடி குடியிருப்பு வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சூப்பர் டெக் லிமிடெட் நிறுவனம் சார்பில் தலா 40 மாடிகளைக் கொண்ட 2 குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தது. இது கடுமையான விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது எனக்கூறி மனுவொன்று தொடரப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், `கட்டடங்களை முழுமையாக இடிக்கவும்’ என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கில் முழு கட்டடத்தையும் ஒரே நேரத்தில் இடிக்க முடியாது என்பதால், படிப்படியாக கட்டடத்தை இடிக்க போதுமான அவகாசம் வழங்க வேண்டும் என நிறுவனம் தரப்பிலிருந்து கோரிக்கையை முன்வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஏற்கனவே கட்டிடத்தை முழுமையாக முடிப்பதற்கு பலமுறை அவகாசம் அளிக்கப்பட்டு, இம்மாதம் 22ம் தேதிக்குள் கட்டடத்தை இடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கூடுதலாக மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என சூப்பர் டெக் நிறுவனம் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அவ்வழக்கை கடந்த மாதம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஓய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வில் ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் இடித்து முடிக்க காலம் அவகாசம் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் கட்டடம் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.