இந்தியா

‘தீர்ப்பில் திருப்தியில்லை..விரைவில் சீராய்வு மனு’ - சன்னி வக்ஃபு வாரியம்

webteam

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திருப்தியில்லை என சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி நிலபரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதோடு, அயோத்தியில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மத்திய, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவதற்கான அமைப்பை 3 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும், நிலத்தை மத்திய அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சன்னி வக்ஃபு வாரிய வழக்கறிஞர்கள், ‘உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். இருப்பினும் அயோத்தி வழக்கின் தீர்ப்பில் திருப்தியில்லை. அயோத்தி வழக்கின் தீர்ப்பை முழுமையாக வாசித்து சீராய்வு மனு செய்யப்படும். தீர்ப்பை யாருடைய வெற்றி தோல்வியாக கருதக் கூடாது. தீர்ப்புக்கு எதிராக எங்கும் போராட்டம் நடத்தம் வேண்டம்” என தெரிவித்தனர்.