காங்கிரஸ் - பாஜக முகநூல்
இந்தியா

காங். - பாஜகவிற்கு தேர்தலில் மக்கள் சொன்ன செய்தி என்ன? ஜனநாயகம் வென்றதா? சுமந்த் சி.ராமன் பதில்!

காங்கிரஸ் - பாஜகவிற்கு தேர்தலில் மக்கள் கொடுத்த செய்தி என்ன? ஜனநாயகம் வென்றுவிட்டதா? அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன் சொல்வது என்ன?

ஜெனிட்டா ரோஸ்லின்

அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன்

2024 மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து புதிய தலைமுறைக்கு பேசிய அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன்,

“தேர்தல் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட வேண்டும் என்ற விருப்பத்தை மக்கள் இத்தேர்தலின் மூலம் தெரிவித்துள்ளனர். பாஜக ஆட்சியை பொறுத்தவரை உத்தரப்பிரதேசத்தில் பாஜக தான் நினைத்த தொகுதிகளை பெற்றிருந்திருந்தால், தனிப்பெருபான்மையை பெற்றிருக்கும்.

பாஜக - காங்கிரஸ்

ஆனால், பாஜகவின் கோட்டையாக கருதப்படும் உத்தரப்பிரதேசத்திலேயே 35 இடங்களை மட்டும்தான் பாஜக வென்றுள்ளது. இதனால் தற்போது கூட்டணி கட்சிகளின் உதவியில்லாமல் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

மேலும், அயோத்தி உள்ள பைசாபாத் தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கெல்லாம் காரணம் மதவாத அரசியல், வெறுப்பு பேச்சு. அவற்றை மக்கள் விரும்பவில்லை. மக்களின் உண்மையான தேவை வேலை, வாழ்க்கைத்தரம் உயர்வு, வீட்டு வசதி போன்றவையே.

இதுவே எதிரணியில் (I.N.D.I.A. கூட்டணி) வாக்குறுதி போன்றவற்றை கொண்டு பிரசாரம் செய்தனர். ஆகவே மக்கள் அவர்கள்பக்கம் சாய்ந்தனர்.

வெறுப்பு பேச்சு, மதவாத அரசியலை மக்கள் வெறுத்துள்ளது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றிதான்.

I.N.D.I.A. கூட்டணியைப் பொறுத்தவரை காங்கிரஸ் 99 இடங்களை வென்றுள்ளது என்பது தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் அழிந்துவிடும் என்ற நிலையை மாற்றி அமைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும். தவிர, காங்கிரஸ்கான கடமைகள் இன்னும் அதிகம் உள்ளது என்பதையும் இந்த வெற்றி உணர்த்துகிறது.

காங்கிரஸ்

குறிப்பாக தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவது ஒருபுறம் இருந்தாலும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, போன்ற வடமாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது வடமாநிலங்களில் மீண்டும் காங்கிரஸ் உருவெடுக்க தொடங்கியுள்ளது என்பதன்மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது” என்றார்.