ஹரப்பா மக்களின் பாத்திரங்கள் எக்ஸ் தளம்
இந்தியா

உணவை வேகவைத்தும் வறுத்தும் சாப்பிட்ட ஹரப்பா மக்கள்.. அசைவ பயன்பாடு குறித்தும் ஆய்வில் வெளிவந்த தகவல்

ஹரப்பா நாகரிக மக்களின் உணவுப் பழக்கம் மற்றும் அவர்களுடைய சமையல் பழக்கவழக்கம் பற்றிய புதிய தகவல்கள் ஆய்வில் வெளிவந்துள்ளன.

Prakash J

சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள ஹரப்பா தளமான சுர்கோடாடாவில் இருந்த ஹரப்பா நாகரிக மக்கள் சமைத்த உணவு குறித்த ஆய்வு வெளியாகி உள்ளது. அவர்கள், தங்களது உணவு வகைகளை வேகவைத்தும் வறுத்தும் உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடித்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. காந்தி நகர் ஐஐடி, கேரள பல்கலைக்கழகம், வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில், ஆசிரியர்கள் அஹானா கோஷ், ராஜேஷ் எஸ்.வி., அபயன் ஜி.எஸ், எலினோரா ஏ ரெபர், ஹெல்னா லிஸ்டன், சிவப்ரியா கிருபாகரன் மற்றும் சாரதா சன்னராயபட்னா ஆகியோர் கலந்துகொண்டனர். ’சமையல் வரலாறுகள் மற்றும் கலாசாரங்கள்’ பற்றிய மாநாடு, கடந்த 5ஆம் தேதி ஐஐடி-காந்திநகரில் நடைபெற்றது. அப்போதுதான் இதுகுறித்த ஆய்வுகள் சமர்பிக்கப்பட்டன. மேலும் இதுகுறித்த விளக்கமும் அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க: ஈரான் மீது போர்| ஜோ பைடன், ட்ரம்ப் ஒரேநேரத்தில் ஆதரவு! அமைதி காக்கும் இஸ்ரேல்.. அடுத்து என்ன?

அதன்படி ஹரப்பா பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பானைகளில் ஒட்டியிருந்த உணவு எச்சங்களை ஆராய்ந்ததில் அவற்றின் தன்மை கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில்,

* சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளை ஹரப்பா பகுதி மக்கள் உண்டனர் என்றும்,

* இருவகை உணவுகளுக்கும் கையாள வெவ்வேறு பாத்திரங்களை பயன்படுத்தினர் என்றும்,

* கடல் மீன்கள் மற்றும் உள்நாட்டு நீர்நிலை மீன்கள் என இருவகை மீன்களையும் அவர்கள் உண்டனர் என்றும்,

* மீன்கள் போன்ற அழுகும் உணவுப்பொருட்களைப் பாதுகாத்து வைக்க சிறப்பான நடைமுறைகளை கையாண்டனர் என்றும்

ஆய்வுகளில் தெரிவந்துள்ளது.

இதுகுறித்த ஆய்வறிக்கையின்படி, “குஜராத்தில் பகஸ்ரா, கன்மேர், ஷிகர்பூர், நவினல் மற்றும் கொட்டா பத்லி உள்ளிட்ட பல்வேறு ஹரப்பா கால தொல்பொருள் தளங்களில் 13 வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த 21 தனித்துவமான மீன் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ’ஒரே அசிங்கமா போச்சு குமாரு..’ அபராத தொகையை வேறு அக்கவுண்ட்டுக்கு மாற்றி அனுப்பிய எலான் மஸ்க்!