இந்தியா

ஜேஎன்யூவில் நடந்த வன்முறையை கண்டித்து மாணவர்கள் பேரணி !

ஜேஎன்யூவில் நடந்த வன்முறையை கண்டித்து மாணவர்கள் பேரணி !

jagadeesh

ஜேஎன்யூவில் நடந்த வன்முறை சம்பவத்தைக் கண்டித்து குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று துணை வேந்தர் பதவி விலக வலியுறுத்தி மாணவர் ‌சங்க பிரதிநிதிகள் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். மாணவர்கள் தொடர்ந்து பேரணி சென்றதால் அவர்களை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தினர்.

இதனால் இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவல்துறை நடத்திய தாக்குதலில் சிலர் காயமடைந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் முற்றுகைப் போராட்டம் காரண‌மாக குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்லும் சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் கடந்த 5-ஆம் தேதி முகமூடி அணிந்த நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் காயமடைந்தனர்.