டெல்லியில் காற்று மாசு புதியதலைமுறை
இந்தியா

டெல்லி: காற்று மாசு அதிகரிப்பு; கடும் கட்டுப்பாடுகள் அமல்!

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததை தொடர்ந்து மத்திய காற்றின் தர மேலாண்மை ஆணையம் டெல்லி எம்.சி.ஆர் பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

PT WEB

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், இன்றுமுதல் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லி சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசு எதிர்ப்பு நடவடிக்கை செயல் திட்டம் (GRAP) நிலை-3 கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சார வாகனங்கள், சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் பி எஸ் - VI டீசல் பேருந்துகள் தவிர அண்டை மாநிலங்கள் இடையேயான டீசல் பேருந்துகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

என்சிஆர் முழுவதும் கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுரங்கம், சாலை, போரிங் மற்றும் துளையிடும் பணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் தண்ணீர் தெளித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடரலாம் என்றும், பள்ளி மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகளை மறு உத்தரவு வரும் வரை தவிர்க்கவும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.