share maraket  google
இந்தியா

புதிய உச்சத்தைத் தொட்ட பங்கு சந்தை; அடுத்த 6 மாதங்களில் சென்செக்ஸ் 87000 புள்ளிகளை எட்டும்!

சமீப காலங்களில் இந்திய பங்கு சந்தையானது தொடர் ஏற்றம் கண்டு வருகிறது. அதன்படி இன்று சென்செக்ஸ் 80,370 புள்ளிகள், நிஃப்டி 24,300க்கு மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

Jayashree A

புதிய உச்சம் கண்ட பங்கு சந்தை:

சமீப காலங்களில் இந்திய பங்கு சந்தையானது தொடர் ஏற்றம் கண்டு வருகிறது. அதன்படி இன்று சென்செக்ஸ் 80,370 புள்ளிகள், நிஃப்டி 24,300க்கு மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

கடந்த 6 மாதங்களாக இந்திய பங்கு சந்தையானது படிப்படியாக உயர்ந்து வருவதற்கு காரணம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரிப்பதும், அமெரிக்காவின் பொருளாதார சரிவும் ஒரு முக்கிய காரணம்.

இந்த மாத இறுதியில் நடக்கவிருக்கும் யூனியன் பட்ஜெட்டிற்கு பிறகு இந்திய சென்செக்ஸ் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் சென்செக்ஸ் 87000 புள்ளிகளை எட்டும் என்றும் கணித்துள்ளனர்.

புதிய உச்சத்தை தொட்ட பங்குசந்தை

இன்று பங்குசந்தையானது புதிய உச்சத்தைத்தொட்டது. அதன்படி நிஃப்டி 24399 புள்ளிகளிலும்,அதே போல் சென்செக்ஸ் 80160 புள்ளிகளைத்தாண்டி வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. கடந்த 6 மாதங்களில் சென்செக்ஸ் 10000 புள்ளிகளைப்பெற்று வரலாறு படைத்துள்ளது.

இன்று லாபத்தை தந்துக்கொண்டிருக்கும் பங்குகள்

வங்கி மற்றும் மீடியாவைத் தவிர, மற்ற அனைத்து துறைகளும் குறிப்பாக ஆட்டோ, ஐடி மற்றும் பார்மா போன்ற துறைகள் 0.5-1 சதவீதம் வரை லாபத்தில் வர்த்தகம் செய்து வருகின்றன.

HCL டெக்னாலஜி, இன்ஃபோசிஸ், டிசிஎஸ் டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் லாபத்தை சந்தித்தன. pitti engineering வருகின்ற வாரம் 300 கோடிக்கு QIP ஐ அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதால் அதன் பங்குகள் இன்று 5.74 % அதிகரித்து காணப்பட்டது.

அதே போல் GMR Overseas நிறுவனமானது ஏமனில் செயல்பட்டு வரும் அல்னகீப் குழுமத்திடமிருந்து ரூ.600 மில்லியன் மதிப்பிலான புதிய ஆர்டரைப் பெற்றுள்ளது. இதனால் GMR ன் பங்குகள் 9.74% அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.