தூக்குதண்டனை விதிக்கப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் கூகுள்
இந்தியா

கேரளா | பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 5 வயது குழந்தை கொலை... குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

கேரளாவில் ஐந்து வயது சிறுமையை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் என்பவருக்கு, நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

Jayashree A

கேரளாவில் ஐந்து வயது சிறுமையை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் என்பவருக்கு, நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

கேரளாவை சேர்ந்த விவாகரத்தான பெண் ஒருவர் தனது ஐந்து வயது பெண் குழந்தையுடன் பத்தினம்திட்டா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்பெண்ணுக்கும் தமிழ்நாட்டின் ராஜபாளையத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (26) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது.

அலெக்ஸ் பாண்டியன்

அலெக்ஸ் பாண்டியனுக்கு போதை பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் 2021ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி அலெக்ஸ் பாண்டியன் போதையில், தனது மனைவியின் 5 வயது குழந்தையை கொடூரமாக பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், குழந்தையின் தாயார் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அலெக்ஸ் பாண்டியனை போக்ஸோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

pocso act

குழந்தையின் பிரேத பரிசோதனையின் முடிவில் குழந்தையின் உடலில் 67 காயங்களும், குழந்தை பாலியல் துன்புறுத்துதலுக்கு உள்ளாக்கப்பட்டதும் தெரியவந்ததை அடுத்து, அலெக்ஸ் பாண்டியனின் மேல் கொலை, சித்திரவதை, போக்ஸோ உட்பட 16 பிரிவுகளில் கீழ் வழக்கு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் நேற்றைய தினம் அலெக்ஸ் பாண்டியனுக்கு தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. இத்துடன் அலெக்ஸ் பாண்டியனுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதில் பாதி தொகை, குழந்தையின் தாய்க்கு செல்லுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.