இந்தியா

இன்னிசையில் கலந்த இசைக்குயில் - அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கர் உடல் தகனம்

இன்னிசையில் கலந்த இசைக்குயில் - அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கர் உடல் தகனம்

கலிலுல்லா

பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்தியாவின் இசைக்குயில்.... மெல்லிசையின் மகாராணி... தனது தேனிசைக் குரலால் இப்படி பல பட்டங்களை தனதாக்கிக் கொண்டவர் லதா மங்கேஷ்கர். தனது வசீகர குரலால் இந்தியாவின் 36 இந்திய மொழிகளிலும் சில வெளிநாட்டு மொழிகளிலும் மொத்தம் 25,000 பாடல்களை பாடியுள்ளார் . அவற்றில் பெரும்பாலானவை இந்தி மற்றும் மராத்தி பாடல்கள். தமிழிலும் பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். பின்னணி பாடுவதுடன் 1955 முதல் 1969 ஆம் ஆண்டு வரை சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 3 இந்தி படங்களையும் ஒரு மராத்தி படத்தையும் லதா மங்கேஷ்கர் இயக்கியுள்ளார்.

அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு கௌரவம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மறைந்த அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக, லதா மங்கேஷ்கரின் உடலுக்கு, சரத்பவார் சச்சின், ஷாரூக் கான், மகாராஷ்டிர முதல்வர், ஆளுநர், உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், லதா மங்கேஷ்கரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். முப்படை வீரர்களின் மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. பிறகு மும்பை சிவாஜி பூங்காவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.