அலகாபாத் உயர்நீதிமன்றம்  முகநூல்
இந்தியா

“வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு விதிகளை வகுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை” - நீதிமன்றம்!

வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு விதிகளை வகுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

PT WEB

வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு நிலையான செயல்பாட்டு நடைமுறை உத்தரவை உத்தரப்பிரதேச மாநில அரசு 2023ஆம் ஆண்டு பிறப்பித்தது. இதற்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பல்வேறு வழக்குகளையும் விசாரித்த நீதிபதி அஞ்சனி குமார் மிஸ்ரா உத்தரப் பிரதேச அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஓட்டுநர் உரிமம் தொடர்பான விதிகளை வகுக்கவும், பயிற்சி பள்ளிகளுக்கான நெறிமுறைகளை வகுக்கவும் மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக வாதாடினார். மாநில அரசின் விதிமுறைகள் மத்திய அரசின் விதிகளுக்கு முரணாக இல்லை என உத்தரப்பிரதேச அரசு வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களையும் நீதிபதி நிராகரித்தார்.