மும்பை முகநூல்
இந்தியா

மும்பை|Air India-ல் 2000 சுமைதூக்கும் பணியிடங்கள்; நேர்க்காணலுக்கு குவிந்த இளைஞர்களால் கூட்ட நெரிசல்

ஜெனிட்டா ரோஸ்லின்

ஏர் இந்தியா நிறுவனம் நடத்திய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்க்காணலில் கலந்துகொள்ள, 25,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் குவிந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், மக்கள் தொகைக்கேற்ப வேலைவாய்ப்பில் இல்லை. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது என்பதை மெய்ப்பிக்கும் வகையிலேயே நாளொன்றுக்கு வேலையின்மையை குறித்த ஒரு சம்பவம் அரங்கேறி விடுகிறது.

குஜராத் சம்பவம்

சமீபத்தில் கூட குஜராத்தில் 10 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, 1000 க்கும் மேற்றப்பட்ட நபர்கள் அலுவலகத்தின் முன்பு குவிந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது. இது அரங்கேறிய சில நாட்களிலேயே, தற்போது இதனை மிஞ்சும் வகையில் மும்பையில் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனமானது சமீபத்தில் விமானங்களில் பயணிகளின் சுமைகளை ஏற்றி, இறக்கும் போன்ற பணிகளுக்கான 2,216 காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வை வெளியிட்டிருந்தது. இதற்காக, மும்பை கலினா பகுதியில் உள்ள ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் அலுவலகத்தில் செவ்வாய் கிழமை (16.7.2024) நேர்காணல் நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இதில் கலந்து கொள்ள திங்கள் கிழமை இரவு முதலே மும்பை அலுவலகத்தில் முன்பு 25,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிய தொடங்கியுள்ளனர். இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை காலையில் நேர்க்காணலுக்கு ,முந்தி அடித்து கொண்டு நுழைய முயன்றதால், அப்பகுதியில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. வேலை தேவை என்ற ஓரே காரணத்திற்காக இரவு முழுவதும் உணவும் குடிநீரும் இன்றி இளைஞர் அவதியடைந்துள்ளனர்.

மாதம் 20,000-25,000 வரை ஊதியம் கிடைக்கும் 3 ஆண்டுகள் ஒப்பந்ததில் வேலை கிடைக்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தநிலையில், பட்டதாரி இளைஞர்கள் அலுவலகத்தின் முன்பு குவிந்த வண்ணம் இருந்துள்ளனர்.

இதனையடுத்து, நிலைமை மோசமடைந்ததை கண்ட அலுவலக அதிகாரிகள், resume ஐ மட்டும் கொடுத்து விட்டு செல்லும்படியும், தகுதியான நபர் இதிலிருந்து தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்து நேர்காணலை ரத்து செய்து கூட்டத்தை கலைத்துள்ளனர்.

தற்போது, இது குறித்த காணொளிகள் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, காரணம்: ஏராளமான தொழில்துறை மற்றும் ஐடி நிறுவனங்களின் இருப்பிடமாக கருதப்படும் மும்பையை நோக்கி வந்தால் வேலையில்லாமல் வெறுங்கையுடன் செல்மாட்டர்கள் என்ற கூறப்படும் சூழலில், மும்பைக்கே இந்த நிலைமை என்றால், இந்தியாவில் மற்றப்பகுதியில் எவ்வளவு வேலைவாய்ப்பு திண்டாட்டங்கள் இருக்கிறது என்பது மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.