இந்தியா

எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு மாற்றம்

webteam

எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.எஸ்.ஐ. வில்சன் கடந்த 8ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவ்பீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிடிபட்டனர். அவர்கள் மீது உபா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்துல் சமீமுக்கு உதவி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை கன்னியாகுமரி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வில்சன் கொலை வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டுள்ளது.