இந்தியா

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

webteam

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். 

70 ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால் திருப்தி இல்லை என்று வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

 அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று வழங்கப்பட்ட தீர்ப்பை பலரும் வரவேற்று கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனரும் அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அமைத்த சமரசக் குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டவருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். அவர் கூறும்போது, ’நீண்ட காலமாக நடந்து வந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் மக்கள் பேண வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.