இந்தியா

ஏழை எளிய மக்களுக்கு 10 கிலோ உணவு தானியங்கள் - பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்

ஏழை எளிய மக்களுக்கு 10 கிலோ உணவு தானியங்கள் - பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்

webteam

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை,எளிய மக்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் செப்டம்பர் மாதம் வரை 10 கிலோ உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இடம் பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை இல்லாத நிலையில் அவர்களுக்கு மாதம்தோறும் தலா 10 கிலோ உணவு தானியங்களை 6 மாதத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ள கால கட்டத்தில் இந்நடவடிக்கை அவசியம் எனவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கொரோனா தடுப்பு குறித்து 4வது முறையாக உரையாற்றினார். அப்போது ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், ஊரடங்கு உத்தரவு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நாளை அரசு வெளியிடும் எனவும் அதில், ஊரடங்கு தளர்வுகள், ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு அறிவிப்புகள் இருக்கும் எனத் தெரிவித்தார்.