இந்தியா

காங். `ஒற்றுமையாத்திரை’ நடைபயணத்தில் ராகுலுடன் இன்று இணைகிறார் சோனியா காந்தி!

காங். `ஒற்றுமையாத்திரை’ நடைபயணத்தில் ராகுலுடன் இன்று இணைகிறார் சோனியா காந்தி!

webteam

காங்கிரஸ் கட்சியின் `ஒற்றுமையாத்திரை’ நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று கலந்து கொள்கின்றார்.

ராகுல் காந்தியை முன்னிறுத்தி ஒற்றுமையாத்திரை எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயனத்தை நடத்தி வருகிறது கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கிய இந்த பாதயாத்திரை கேரளாவில் நிறைவு செய்து தற்பொழுது கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் ஓய்விற்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கும் பாதயாத்திரையின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்கின்றார்.

இதற்காக இரண்டு தினங்களுக்கு முன்பாகவே கர்நாடக மாநிலம் வந்த அவர் மைசூரில் தங்கியிருந்தார். கட்சி நிர்வாகிகளை சந்தித்த அவர் மத வழிபாடு தளங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். ராகுல் காந்தியும் அவருடன் தங்கி இருந்த சூழலில் இன்று பாதயாத்திரையில் இருவரும் கலந்து கொள்கின்றனர்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் எதிலும் சோனியா காந்தி கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மிகப்பெரிய ஒரு பொது நிகழ்ச்சியாக இந்த பாத யாத்திரையில் கலந்து கொள்கின்றார் இது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது