பெற்றோருடன் சமீர் ரிஷு மொஹந்தி இன்ஸ்டா
இந்தியா

ஒடிசாவில் ஒரு காதல் சின்னம்! ஜப்பான் பெண்ணும் இந்திய ஆணும் கட்டிய ஹோட்டல்.. மகன் பகிர்ந்த சுவாரஸ்யம்

Prakash J

இந்திய தந்தை மற்றும் ஜப்பானிய தாய்க்கு பிறந்தவர் சமீர் ரிஷு மொஹந்தி. இவர், ராப்பர் பிக் டீல் என்ற பெயரால் அறியப்படுகிறார். இந்த நிலையில், அவர் வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய பெற்றோரின் காதல் கதையைத் தெரிவித்துள்ளார். அதாவது, அவர்கள் இருவரும் சந்தித்தது குறித்தும் காதலித்து திருமணம் செய்துகொண்டது குறித்தும் பற்றிய உணர்வுப்பூர்வமான கதையை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அந்த வீடியோவில், “ஜப்பானைச் சேர்ந்த எனது தாயார் ஓர் எழுத்தாளர். அவர் கல்லூரியில் படிக்கும்போது உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அதன் ஒருபகுதியாக பூரிக்கு (ஒடிசா மாநிலம்) வந்தபோது, அவருக்கு அந்தப் பகுதி மிகவும் பிடித்துப் போனது.

இதையும் படிக்க: ரஷ்யா, பெலாரஸ் நாடுகளுக்கு ஒலிம்பிக் கமிட்டி தடை| AIN என்றால் என்ன? கலந்துகொண்ட 32 நடுநிலை வீரர்கள்!

பின்னர், பட்டம் பெற்ற பிறகு, அவர் பூரியில் குடியேற முடிவு செய்தார். ஆதலால் இங்கு செட்டிலாகி, புத்தகம் எழுத விரும்பினார். ஆனால் அதற்கு போதிய வருமானம் இல்லை. அதனால், ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு ஹோட்டலைக் கட்ட விரும்பினார். என்றாலும், எனது தாயார் வெளிநாட்டவர் என்பதால் அங்கே ஹோட்டல் கட்ட நிலம் வாங்க முடியவில்லை. அப்போதுதான் எனது தந்தையை சந்தித்துள்ளார். அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் அங்கு ஹோட்டலை கட்டினர். அந்த ஹோட்டலுக்கு காதல்-வாழ்க்கை (LOVE-LIFE) என்று பெயரிட்டனர். இந்த ஹோட்டல் எனது தாய்-தந்தையின் காதல் கதைக்கு ஒரு சான்று. இந்த ஹோட்டல் இன்றும் பூரியில் உள்ளது. சில காதல் கதைகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்பது உண்மைதான்” எனக் கூறி முடிக்கிறார். இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளுடன் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: பெண் அதிகாரி நெற்றியில் குங்குமம் வைத்த காங். எம்.பி.. கர்நாடகாவில் வெடித்த சர்ச்சை.. அமைச்சர் பதில்