டெல்லியில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் டிப்ளமோ இஞ்னியரிங் படித்த மாணவருக்கு அமெரிக்க நிறுவனத்தில் ரூ70 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. டிப்ளமோ இஞ்னியரிங் படித்த மாணவருக்கு கிடைக்கும் அதிகபட்ச தொடக்க சம்பளம் இதுவே ஆகும். டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லமிய பல்கலைக் கழகத்தில் படித்த முகமது அமீர் அலி என்ற மாணவருக்குதான் இப்படியொரு வாய்ப்பு கிட்டியுள்ளது.
முகமது அலியின் தந்தை ஒரு எலக்ட்ரீசியன். 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்காததால் அவருக்கு கல்லூரியில் இஞ்னியரிங் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இஞ்னியரிங் படிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் முகமது அலி, ஜமியா மில்லியா இஸ்லமியா கல்லூரியில் 2015ம் ஆண்டு மெக்கானிகல் பிரிவில் டிப்ளமோ இஞ்னியரிங் சேர்ந்துள்ளார். இஞ்னியரிங் படிப்பில் சேரமுடியவில்லை என்றாலும், தன்னுடைய கனவான எலக்ரிக் பிரிவில் சாதிக்க கடுமையாக உழைத்திருக்கிறார் இவர்.
அவரது கடுமையான உழைப்புக்கு பலனாக அவரை பிரிஸ்ஸன் மோட்டார் வெர்க்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம் ஒரு லட்சத்து எட்டு ஆயிரம் டாலர் சம்பளத்திற்கு பல்கலைக் கழகத்தில் இருந்து வேலைக்கு எடுத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 70 லட்சம் சம்பளம். ஆண்டு வருமானமாக இவருக்கு இது கிடைக்க உள்ளது. குக்கிராமத்தில் வசிக்கும் இவருக்கு இது ஒரு பெருந்தொகை. இதற்கு முக்கிய காரணம் அவர் படிக்கின்ற காலத்தில் செய்த புராஜெட்தான். பாட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் இஞ்சினியர் என்ற பணிக்குதான் இவரை அமெரிக்க நிறுவனம் அமர்த்த உள்ளது. தன்னுடைய புராஜெட் குறித்து முகமது அலி,“தன்னுடைய புராஜெட் வெற்றிபெற்றால், செலவே இல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களை இயக்க முடியும்” என்கிறார்.
மேலும் முகமது அலி பேசுகையில், “தொடக்கத்தில் என்னை என்னுடைய ஆசிரியர்கள் யாரும் நம்பவில்லை. எலக்டீரிசியன் பிரிவில் இது புதிய ஐடியா ஆகும். இருப்பினும், என்னுடைய உதவிப் பேராசிரியர் வக்கார் ஆலம் தான் என்னிடம் உள்ள திறமையை அறிந்து கொண்டு ஊக்கப்படுத்தினார். வாழ்வில் முன்னேற கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்றுதான் எல்லோரிடமும் கூறிவேன்” என்றார்.
ஒருநாள் முகமது அலி ஒரு புரோடோ டைப் என்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியை செய்துள்ளார். முகமது அலியின் இந்த ஆராய்ச்சி பிடித்து போனதால் அதனை பல்கலைக் கழக இணையதளத்தில் பதிவிட்டுள்ளார், இந்த ஆராய்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல், அவர்களின் இணையதளத்தில் உள்ள வீடியோ புராஜெட்டை அமெரிக்காவைச் சேர்ந்த பிரிஸ்ஸின் மொடார் நிறுவனம் பார்த்து வியந்துள்ளது. அந்த மாணவருக்கு, வேலை வாய்ப்பினையும் வழங்கியுள்ளது. அதேபோல், முகமது அலியின் தந்தை ஷம்ஷட் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.