கைது செய்யப்பட்ட சன்னபசப்பா  pt web
இந்தியா

சொத்து தகராறில் கூலிப்படை வைத்து தந்தையைக் கொலை செய்த மாற்றுத்திறனாளி மகன்; அதிர்ச்சி பின்னணி?

கர்நாடகாவில் சொத்து தகராறில் தந்தையைக் கூலிப்படை வைத்து கொலை செய்த மகன் மற்றும் மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

webteam

கர்நாடக மாநிலம், பாகல்கோட்டே அருகே உள்ள திம்மாபுரா பகுதியைச் சேர்ந்தவர் சன்னப்பா [66]. இவர் கடந்த 25ம் தேதி ராம்புரா ரயில் தண்டவாளம் அருகே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

உயிரிழந்த சன்னப்பா

இச்சம்பம் குறித்து தகவல் அறிந்து சென்ற பாகல்கோட்டே போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லைப் போட்டும், மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார், சந்தேகத்தின் பேரில் விஜயபுரா பகுதியைச் சேர்ந்த மகேஷ் மரடிமத் [45], என்பவரைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சன்னப்பாவை அவரது மாற்றுத்திறனாளி மகன் சன்னபசப்பா [38], மருமகள் சிவபசவம்மா [36], மற்றும் உறவினர் ரமேஷ் மனகுளி [34] ஆகியோர் சேர்ந்து கொலை செய்யக் கூறியதும், அதற்காக 3 லட்சம் ரூபாய் கொடுத்ததும் தெரிய வந்தது. அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சன்னப்பா மருமகள்

இதனைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், சன்னப்பா பெயரில் 37 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தைத் தனது பெயருக்கு மாற்றித் தரும்படி, மகன் சன்னபசப்பா கேட்டுள்ளார். அதற்கு சன்னப்பா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் சன்னபசப்பா, மருமகள், மற்றும் உறவினர் ஆகிய 3 பெரும் சேர்ந்து, கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. உயிரிழந்த சன்னப்பாவின், சடலத்தை ரயில் தண்டவாளம் அருகே போட்டுச் சென்றுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ரமேஷ் மனகுளி

இதையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்துக்காகத் தந்தையைக் கூலிப்படை வைத்து மகன் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.