இந்தியா

இணையத்தை கலக்கும் சூரிய கிரகணத்தின் சில பிரத்யேக புகைப்பட காட்சிகள்!

இணையத்தை கலக்கும் சூரிய கிரகணத்தின் சில பிரத்யேக புகைப்பட காட்சிகள்!

webteam

கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் பிரத்யேக கண்ணாடிகளை அணிந்து சிறுவர் சிறுமியர் சூரியனை பார்த்தனர். குறுகிய காலத்தில் மட்டுமே சூரிய கிரகணம் நடைபெறுவதால் இன்று அறிவியல் மையத்தில் பொதுமக்கள் பார்ப்பதற்கு எந்த வசதியும் செய்யப்படவில்லை. இருப்பினும் வெறும் கண்களால் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது என்பதால் பெருமளவில் மக்கள் அங்கு குவிந்தனர்.

இதேபோன்று பகுதி நேர சூரிய கிரகணம் மீண்டும் 2027 ஆகஸ்ட் மாதம் தான் தெரிய வரும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்தனர். இன்று வானில் மாலை 5.14 தொடங்கி 5.44 வரை தெரிந்த இந்த பகுதி நேர சூரிய கிரகணத்தின்போது எடுக்கப்பட்டு, இணையவாசிகளால் பகிரப்பட்ட சில பிரத்யேக புகைப்பட காட்சிகள் இங்கே: