இந்தியா

லேசான அறிகுறியுடனே பிரபலங்கள் மருத்துவமனைகளை ஆக்கிரமித்துள்ளனர்: மகாராஷ்டிரா அமைச்சர்

லேசான அறிகுறியுடனே பிரபலங்கள் மருத்துவமனைகளை ஆக்கிரமித்துள்ளனர்: மகாராஷ்டிரா அமைச்சர்

Veeramani

லேசான கொரோனா அறிகுறிகள் இருந்தாலும்கூட சில பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள், மும்பையிலுள்ள மருத்துவமனை படுக்கைகளை ஆக்கிரமித்துள்ளனர் என்று மகாராஷ்டிரா அமைச்சர் அஸ்லம் ஷேக் தெரிவித்தார்.

“அதிகளவில் கொரோனா அறிகுறிகள் இல்லாத பிரபலங்கள் பெரிய தனியார் மருத்துவமனைகளில் நீண்ட காலமாக தங்கிக்கொண்டு படுக்கைகளை ஆக்கிரமிக்கிறார்கள். முன்னுரிமையின்படி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தீவிர நோயுற்றவர்களை அனுமதிக்க, இந்த படுக்கைகள் பயன்படுத்தியிருக்கலாம் " என்று மகாராஷ்டிர ஜவுளித்துறை அமைச்சர் அஸ்லம் ஷேக் செய்தியாளர்களிடம் கூறினார்.

கொரோனா அறிகுறிகள் காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சைபெற்று பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்தார்.

கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக மும்பை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் தினமும் 10,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். மொத்தமாக 90 ஆயிரம் பேர் மும்பையில் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் உயிர்காக்கும் மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுகிறது.