தனிமனித இடைவெளி ஏதுமின்றி தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற விஷயங்களை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென அரசு வலியுறுத்தி வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் எம் எல் ஏ ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
நிறுவனம் ஒன்றில் இருந்து 32 தொழிலாளர்களை கடந்த பாஜக ஆட்சி வேலையை விட்டு நீக்கியதாகவும், அவர்களை மீண்டும் பணியில்
அமர்த்த வேண்டுமென்றும் காங்கிரஸ் எம் எல் ஏ ஜெய்ஸ்வால் போராட்டம் செய்தார். இந்த போராட்டத்தின் போது அவரது ஆதரவாளர்கள்
பலரும் உடன் இருந்தனர். ஆனால் எம் எல் ஏவின் இந்த போராட்டம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் மாஸ்க் அணியாமல், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காமல் ஒரு எம்
எல் ஏ வே கூட்டத்தைக் கூட்டியது தவறு என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எந்தவித கோரிக்கையாக இருந்தாலும் அதனை தகுந்த
பாதுகாப்புடனும், தற்போதைய சூழலுக்கு ஏற்ப விழிப்புணர்வுடனும் தான் செய்ய வேண்டுமெனவும் இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
கூட்டமாக நின்று போராட்டம் செய்த எம் எல் ஏவின் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது