ஆவணக் குறும்படமான, ’Period. End of Sentence’ ஆஸ்கர் விருது வென்றதை அடுத்து, அந்தப் படத்தில் நடித்துள்ள இந்திய பெண் சினேகா இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
91 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி ஸ்டூடியோவில் கோலாகலமாக இன்று நடைபெற்றது. இதில், ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது ‘பீரியட். எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ என்ற படத்துக்கு வழங்கப்பட்டது.
மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை இப்படம் பதிவு செய்துள்ளது. கோவை யை சேர்ந்த அருணாச் சலம் முருகானந்தம் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம், கோவை, உத்தரபிரதேச கிராமங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டது.
இந்தப் படத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹபூர் அருகே உள்ள கதிகெரா கிராமத்தைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ணும் நடித்திருந் தார். இந்நிலையில் இந்த ஆவணக்குறும்படம் ஆஸ்கர் விருது பெற்றதை அடுத்து, தனது கிராமத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டினார் சினேகா.